Wednesday, August 15, 2012

DRINK CHINESE TEA




தேச் சீனா குடிக்கும் அனுபவம்

சீனத்துத் தேயிலை என்பது ஒரு ரகமான டீ தூள். நாம் சாதாரணமாகக் குடிக்கும் டீத்தூளைப் போல இருக்காது. ஒரு செண்டிமீட்டர் - 2 செண்டிமீட்டர் அளவில் சிறு சிறு மெல்லிய குச்சிகள் போல் இருக்கும்.
இதைத் தேச்சீனா என்பார்கள்.
அதிலேயே ஊலாங் தே என்னும் ஒரு வகை டீ இருக்கிறது. 
அது கிடைப்பது அரிது. 
ரொம்பவும் விலை. ஒரு டப்பியின் விலை நூற்றிருபது ரீங்கிட் வரை இருக்கும். அறுபது ரீங்கிட்டுக்கும் கிடைக்கும். அது இன்னொரு ரகம். 
வட்டவடிவமாகச் சப்பட்டையாக 'கேக்' போல தேத்தூளை அடித்துக்காய வைத்திருப்பார்கள். தேவைக்கேற்ப உடைத்து எடுத்துத் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
விலை ரொம்ப ரொம்ப அதிகம். மிக மலிவான கேக் ஒன்று ஐம்பது ரீங்கிட். நல்ல தரமானது ஐந்நூறு ரீங்கிட்.
இந்த மாதிரியான உயர் ரக டீயைத் தயாரிப்பதற்காகவே தனிப்பட்ட டீப்பாட், சிறிய கப்புகள் எல்லாம் வைத்திருக்கிறார்கள். மெல்லிய சுட்ட களிமண்ணால் ஆனவை. 
டீப் பாட்டைக் கொதிக்கும் தண்ணீரில் ஊறவைத்துத் தண்ணீரை ஊற்றிவிட்டு, மீண்டும் வெந்நீரை ஊற்றி, அதன்மேல் பக்குவமாக டீத்தூளைப் போடவேண்டும். இரண்டு Dried Salted Plums போடவேண்டும். இதை அஸாம்கோ என்பார்கள். 
டீப் பாட்டை மூடிவிடவேண்டும்.

டீப் பாட்டை வைத்துவிட்டு அமைதியாகத் தியானம் செய்ய வேண்டும்.  அமைதி, Tranquility, Positivism, சாந்தி, கருணை ஆகிய சாயல்களை மனதில் தோற்றுவித்துக் கொள்ள வேண்டும். மனம் டீப் பாட்டுக்குள் இருக்கும் டீயில் இருக்கவேண்டும். கனிவான பார்வையை டீப்பாட்டின்மேல் செலுத்தவேண்டும்.

அதன் பின்னர் டீக் கப்பை மீண்டும் வெந்நீரில் ஊறவைத்து விட்டு, அதில் குறைந்த அளவு டீயை ஊற்றவேண்டும். 
டீக் கப்பை மெதுவாக மூக்கின் கீழ்ப் பிடித்து, டீயிலிருந்து வரும் மெல்லிய நீராவியை மிக மெள்ள சுவாசிக்கவேண்டும். 
அந்த Aroma உள்ளே சென்ற பிறகு, டீயை மெதுவாக சப்பி வாய்க்குள் 
சுழற்றிவிட்டு, மூச்சை லேசாக இழுத்து, அந்த அரோமாவை மீண்டும் அனுபவித்து, மெதுவாக மிடறுக்குள் செலுத்தவேண்டும். 

"சரியாப்போச்சு. ஒரு சிங்கில் டீய அடிக்கறதுக்கு இவ்ளோ தோணாதிக்கமா? வேற வேலச் செரவ இல்ல?" 

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$