Monday, December 24, 2012

AGAINST ODDS-#1


AGAINST ODDS-#1
பெரும் சாதனை-#1
முஹம்மது அலி X ஸான்னி லிஸ்ட்டன் உலக ஹெவி வெய்ட் சாம்ப்பியன்ஷிப் போட்டி


சில நாட்களுக்கு முன், யூட்டியூபில் Norman Cousins என்பவர் சம்பந்தமாக ஏதும் இருக்கிறதா என்று தேடிக்கொண்டிருந்தேன்.
அவருடன் எடுக்கப்பட்ட ஒரு பேட்டி இருந்தது. அந்தப் பேட்டி ஒரு 
ஸீரிஸில் இருக்கின்றது. ஸீரிஸ் பெயர்?
DAY AT NIGHT. 
பேட்டிகளை எடுத்தவர் பெயர் JAMES DAY. டீவீயில் இரவுகளில் எடுக்கப்பட்ட பேட்டி. ஆகையால்தான் அந்தத் தலைப்பு. 
இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த சாதனையாளர்கள், அறிஞர்கள், புலவர்கள், நடிகர்கள், இலக்கியவாதிகள் என்று பலரைப் பேட்டி எடுத்துள்ளார். அவர் எடுத்தவை நூற்றுமுப்பது. அவற்றில் சிலவற்றை யூட்டியூபில் காணலாம்.
நார்மன் கஸின்ஸையும் பேட்டி கண்டுள்ளார். 
வேறு என்னென்ன பேட்டிகள் உள்ளன என்பதைப் பார்க்கும்போது குத்துச்சண்டை வீரர் முஹம்மது அலியும் கிடைத்தார். 
அதன் தொடர்பாக இன்னொரு ஸீரிஸ் கிடைத்தது. முஹம்மது அலி 
சண்டையிட்ட போட்டிகளில் ஜெயித்த சண்டைகளைத் தொகுத்துப் 
போட்டிருக்கிறார்கள்.
அந்த ஸீரிஸில் நான் பார்த்த முதல் சண்டை முஹம்மது அலியின் உலக 
ஹெவிவெய்ட் சாம்ப்பியன் போட்டிகளில் முதலாவதாக நடந்த Sonny Liston vs Muhammed Ali.
அலியை இரண்டே ரவுண்டில் வீழ்த்திவிடுவதாக ஸான்னி சொல்வார். 
ஸான்னியை எட்டு ரவுண்டில் வீழ்த்தப்போவதாக அலி சொல்வார்.
ஸான்னி லிஸ்ட்டன் குத்துச்சண்டைப் போட்டிகளில் ஆட்களைக் 
கொன்றிருக்கிறார். தோற்றதே கிடையாது. அவர் சிறையில் இருந்த ஆசாமி. அவருக்கும் மா·பியா போன்ற பயங்கர நிறுவனங்களுக்கும் ஏதோ சம்பந்தம் இருந்ததாகக் கருதினார்கள். 
அவருக்கு நீளமான கைகள்.மிகவும் பலமான குத்துக்களை விடுவார்.
Big Bear - பெருங்கரடி என்னும் பெயர் அவருக்கு உண்டு. அதை 
வைத்தவரே அலிதான்.
லிஸ்ட்டன் எங்கெங்கு பயிற்சி செய்கிறாரோ, அங்கெல்லாம் ஆட்களைக் கூட்டிச்சென்று கேலிக் கூக்குரல்களைப் போட்டு அவருக்குக் கடுப்பேற்றி 
வந்தார். வெறியையும் ஏற்றிவந்தார்.
இதெல்லாம் ஸைக்காலஜிக்கல் வார்·பேர் Psychological Warfare 
என்னும் வகையில் அடங்கும். சுருக்கமாக PSY-WAR என்பார்கள்.
இது அலியின் பல உத்திகளில் ஒன்று.
கண்மூடித்தனமாக தன்னைப் பற்றி பீற்றிக்கொண்டு திரும்பத் திரும்பச் 
சொன்னதையே சொல்லி சொல்லி ஜம்பம் அடித்துக்கொள்வார். அதே சமயம் 
எதிராளியை எந்த அளவுக்கு மட்டம் தட்டிப் பேசமுடியுமோ அதையெல்லாம் 
செய்வார். என்னத்தையாவது கர்வமாக ஆர்ப்பாட்டமாக திமிராக வீராப்பாகச் 
சொல்லிக் கொண்டேயிருப்பார். ஆகையாலேயே அவருக்கு 'லூயீவில் லிப்' 
என்று பட்டப்பெயர். பாக்ஸிங் ரிங்கில் சண்டைக்கு முன்னால் விடாமல் கத்திப் 
பேசிக்கொண்டே இருப்பார். 
இது இன்னொரு உத்தி. 
இதனால் அலியை அமெரிக்காவில் பெரும்பாலோருக்குப் பிடிக்காது. 
இவையெல்லாம் அவருடைய வெற்றிக்குப் பெரிதும் உதவின.
இந்த உத்திகளைப் பற்றி வேறொரு கட்டுரையில் இன்னும் விரிவாகப் 
பார்ப்போம்.
இதனாலெல்லாம்  மக்கள் அசரவில்லை. 
லிஸ்ட்டன் ஒரு கில்லர்.
ஆகவே அலி தோற்றுவிடுவார் என்றே எல்லோரும் நினைத்தனர். 

ஸான்னி லிஸ்ட்டன் சண்டையைப் பற்றி நிறையக் கேள்விப்
பட்டிருக்கிறேனேயன்றி அந்தச் சண்டையை படங்களில் பார்த்தது கிடையாது.
இப்போதுதான் அந்த வாய்ப்புக் கிடைத்தது.
உலக ஹெவி வெய்ட் சாம்ப்பியன் போட்டியின் ஆரம்பத்தில் அலியை இரண்டே ரவுண்டுகளில் வீழ்த்து விடப்போவதாக லிஸ்ட்டன் கூறினார். அதுவும் வாயால் சொல்லவில்லை. இரண்டு விரல்களைக் காட்டினார்.
ஒவ்வொரு ரவுண்டிலும் லிஸ்ட்டன் விட்ட குத்துக்கள் அலியின்மீது 
படவேயில்லை. அலி தம்முடைய விசேஷ டெக்னிக்கான பட்டாம்பூச்சி போல நாட்டியம் ஆடிக் கொண்டே தேனீயைப் போலக் கொட்டிக் கொண்டேயிருந்தார். 
"I DANCE LIKE BUTTERFLY AND STING LIKE A BEE"
இரண்டாவது ரவுண்டிலிருந்து லிஸ்ட்டனின்மீது குத்துக்களை விட்டார். 
ஆறாவது ரவுண்டு முடிந்தது. லிஸ்ட்டனின் கண்ணுக்குக் கீழே சதை 
கிழிந்திருந்தது. 
அவருடைய மூலையில் உட்கார்ந்திருந்தார். அவருடைய ட்ரேய்னர் 
முதலியோர் அவரை ஊக்கப்படுத்திக்கொண்டிருந்தனர்.
ஏழாவது ரவுண்டுக்கான மணி அடித்தது.......
லிஸ்ட்டன் எழுந்து வரவில்லை.
முடியவில்லை. 
அவருடைய தோள்பட்டையில் ஒரு தசை நாண் அறுந்துவிட்டதாகப் பின்னால் கண்டுபிடித்தார்கள். ஆகவே கையைத் தூக்க முடியவில்லை.
அவ்வளவுதான்.
அலி கைகளை உயரத் தூக்கி, கத்திக்கொண்டு குதித்துக்கொண்டிருந்தார்.
ரெ·பரி சண்டையை நிறுத்தினார். நடுவர்கள் லிஸ்ட்டன் ஏழாவது ரவுண்டில் நாக் அவுட் என்று பிரகடனப் படுத்தினர்.
அலி உலக ஹெவி வெய்ட் சாம்பியன் ஆனார்.....
கதை அத்துடன் முடியவில்லை.....

ஸான்னி லிஸ்ட்டன் தோற்றதை ரொம்பப்பேர் ஏற்றுக் கொள்ளவில்லை. 
ஆகவே ஒரு ரீமேட்ச்சுக்கு ஏற்பாடு செய்தனர்.
சண்டை ஆரம்பிக்கும்போதே அலி ரிங்கைச் சுற்றிச் சுற்றி குதித்துக் 
கொண்டே வந்தார். அவ்வப்போது லிஸ்ட்டனைக் குத்துவார். லிஸ்டன் பல குத்துக்களை விட்டார். ஆனால் அலி அவற்றிலிருந்து தப்பித்துக் கொண்டார். 
திடீரென்று வெகு வேகமாக லிஸ்ட்டனுடைய தலையில் தம்முடைய வலது கையால் அலி ஒரு குத்து விட்டார். 
அவர் கையை ஓங்கியதும் தெரியாது. குத்து விட்டதும் தெரியாது. அதே சமயம் லிஸ்ட்டன் ஒரு குத்தை விட்டார். ஆனால் அது படவேயில்லை. ஆனால் ஸான்னி அப்படியே முன்னால் போய்த் தடுமாறி விழுந்தார். தரையிலேயே புரண்டார். எழுந்திருக்க முடிய வில்லை. மீண்டும் விழுந்தார். இதன் நடுவில் 
அலி தம்முடைய கால்களை முன்னும் பின்னுமாக வேகமாக எடுத்துவைத்து 
குதிக்க ஆரம்பித்தார். இது ALI SHUFFLE என்று பெயர் பெற்றது.

ஒரு வழியாக லிஸ்ட்டன் எழுந்து விட்டார். நடுவாராகிய ஜோ 
வால்க்காட்டுக்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதுவும் புரியவில்லை.
சண்டையைத் தொடருமாறு உத்தரவிட்டார். 
அடுத்தடுத்து லிஸ்ட்டனுக்குக் குத்துக்கள் விழுந்தவண்ணமிருந்தன. 
லிஸ்ட்டனால் ஒன்றும் செய்ய இயலவில்லை. உடனேயே ஜோ வால்க்காட் சண்டையை நிறுத்தினார். 
ஒன்றாம் ரவுண்டிலேயே ஸான்னி நாக் அவுட்டாகி விட்டதாக அறிவிப்புச் செய்தார். 
அவரை நாக் அவுட் செய்த குத்தை யாரும் பார்க்கவில்லை. அலிக்கே 
அது சந்தேகமாயிருந்தது. அதன் பின் ஸ்லோ மோஷன் படத்தில் வெகு 
வேகமாக வலக்கையால் லிஸ்ட்டனின் தலையில் அலி குத்தி விடுவதைக் கண்ட பின்னரே நம்பினர்.
அதை இப்போதும் The Phantom Punch என்றே குறிப்பிடுகிறார்கள்.
கம்ப ராமாயணத்தில் ஜனக மஹாராஜாவின் அரசவையில் சிவ தனுசு 
ஆகிய வில்லை எடுத்து வளைத்து நாணேற்றும் போட்டி. 
மற்றவர்கள் யாராலும் முடியவில்லை. 
ராமர் அதை எடுத்தார். ஒரு முனையைக் காலால் மிதித்து நிலைப்படுத்திக் கொண்டார். இடது கையால் வில்லை வளைத்தார். வலக்கையால் நாணைப் பூட்ட....... 
ஆனால் பூட்டுமுன்னரே இடி முழக்கம் போல் சப்தம் கேட்டது. 
அந்த வில் அப்படியே முறிந்து விழுந்தது. 
ஆனால்.....
ராமர் வில்லை எடுத்தை மட்டுமே அவையினர் கண்டனர். தூக்கி 
நிறுத்தியதையோ, வளைத்ததையோ நாணை இழுத்துப் பூட்டப் போனதையோ யாரும் பார்க்கவில்லை. 
அந்த வில் முறிந்ததைக்கூட யாரும் பார்க்கவில்லை. 
அந்த பயங்கர சப்தத்தைத்தான் கேட்டனர். 
அவ்வளவு வேகத்தில் நடந்துவிட்டது.
"எடுத்தது கண்டனர்.... இற்றது கேட்டனர்" என்கிறார் கம்பர். 

அது போலத்தான்.
அலி வலக்கையை எடுத்ததையோ ஓங்கியதையோ குத்து விட்டதையோ யாரும் பார்க்கவில்லை.
ஆனால் ஸான்னி லிஸ்ட்டன் தடுமாறியவாறு முன்னுக்குச் சென்று 
விழுந்ததையும் புரண்டதையுமே எல்லாரும் பார்த்தனர்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Friday, December 14, 2012

NOTEWORTHY NOTES-31


  • NOTEWORTHY NOTES-#1




  • DrJaya Barathi $
    Bengkulen is a strip of land on the south west coast of Sumatra Island, Indonesia.
    It was the earliest trading post of the British East India Company.
    They built a strong fort called Fort Marlborough- named after the Duke Of Marlborough, hero of Blenheim.
    Later they got Penang, which they named Prince Of Wales Island.
    And then Batavia in Java.
    When they made the Anglo-Dutch Treaty, they exchanged the Bengkulen and Batavia for Malacca and later acquired Singapore.
    Malacca, Penang and Singapore were made into the Straits Settlements and were governed from Calcutta for some time.
    Sending people as convicts to Straits Settlements or Caribbean Island was known as 'Dheevaandhara sitchai'.
    Gone for good - no come back.
    At first, the British branded the convict number on to the fore-head. So that they could not go back to their home towns.
    The habit must have been dropped when they started sending convicts to the Andaman Islands.

  • Subbiah Ravi Marudu's son,Durai a young lad was also exiled to Malaya.

  • Subbiah Ravi Shri Durai,after sometime ,met an East India Company officeial,requested him to deliever a letter to his relatives in India.Citing administrative etiquette,the officer declined to accept the letter.I think this issue is an authenticated one

  • DrJaya Barathi Duraisamy arrived in Penang in late 1801 -probably in late November or December. Took about a month to reach Penang. The ship was crowded with 72 convicts.
    In 1817, the Anglican Church was completed and Bannerman's daughter's marriage took place. Bann
    erman hanged Kattabommu in 1799. He got promotions and became the governor of Penang. Colonel Welsh was a friend of the Marudhus at first but was later involved in the campaign against them together with Colonel Agnew.
    He was the son-in-law of the first governor of Penang and went there to sort out something about his heritage.
    While there, he took part in the marriage of Bannerman's daughter who was born in Palayamkottai.
    That is when Duraisamy Servai asked him to deliver a letter to his relatives in Sivagangai. Must have been around 1818 and 1820.
    That church is just a few metres away from my home. I went through a lot of material to trace Duraisamy.

  • Subbiah Ravi thank you,sir for this information

  • DrJaya Barathi $
    Yes.
    This is a very rare information. I wanted to publish it in my book about the Marudhu Brothers - 'NEW LIGHT ON MARUDHU SERVAIS'.

    http://www.visvacomplex.com/My_Research_About_Marudhu_Servai_Brothers_And_Sivagangai_Country.html
  • Tuesday, October 9, 2012

    PARA MANTHRA VEBHEDHANAM


    பரமந்திர விபேதனம் 

    "பரமந்த்ர விபேதனம் என்றால் என்ன?" என்று பெருமாள் கேட்டிருந்தார். 
    நம்மை வேண்டாத பிறத்தியார் ஏவிவிட்ட மந்திரங்களை உடைக்கும் 
    செயலைத்தான் அவ்வாறு குறிப்பிடுவது. 
    இப்போதெல்லாம் மலேசியாவில் பிரத்யங்கிரா ஹோமங்கள், சத்ருவினாசன ஹோமம் என்று வகை வகையாக, விரிவாக, அதிகமாகச் செய்கிறார்கள். 
    லோக க்ஷேமத்துக்காகவோ 'லோகான் ஸமஸ்த சுகினோ பவ'ந்தாக வேண்டுமென்றோ இந்த மாதிரி ஹோ¡மங்கள் செய்யப்படுவதில்லை. 
    எங்கு பார்த்தாலும் எப்போதும் இந்த மாதிரியான யாக, ஹோமங்களைச் செய்யும்போது அந்த நெகட்டிவ் எதிர்மறை அதிர்வலைகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அப்போது தெரிந்தோ தெரியாமலோ யாருமே பாதிப்படையும் சாத்தியக்கூறுகள் நிறைய இருக்கின்றன.
    தவிர்க்க முடியாத நிலைமைகளில் அந்த ஹோமத்தையோ பரமந்த்ர விபேதன வித்யாவையோ நன்கு அறிந்தவர்கள் மூலம் செய்யப்பட வேண்டிய கர்மா இது.
    டெலஸ்கோப் லென்ஸ் மூலம் குறி பார்த்து, குறி வைத்து டார்கெட்டை மட்டுமே அடிக்கவேண்டிய விஷயம். 
    சும்மா ஆர்டீ எக்ஸைக் கீலோக் கணக்கில் போட்டு ஆயிரம் பால்பேரிங்ஸைச் சேர்த்து செய்த வெடிகுண்டை தூக்கி ஜனப்புழக்கம் மிகுந்த இடத்தில் போடுவது போல செய்யக்கூடாதல்லவா? 
    அந்த மாதிரிதான் பரமந்திர விபேதனமும்.
    'பரமந்த்ரவிபேதனம்' என்பதன் விளக்கத்தைச் சுருக்கமாகச் சொல்லி 
    யிருந்தேன். 
    'பிறத்தியார் பிரயோகம் செய்த மந்திரங்களை' என்பதில்தான் அழுத்தம் கொடுக்கவேண்டியுள்ளது. 
    சிலர் மந்திர உபதேசம் பெற்று மந்திர ஜபங்கள் செய்து உபாசனை அல்லது பூஜைகளைச் செய்வார்கள். இவை அவர்களுக்கு உரிய மந்திரங்கள். அவர்களுக்குச் சொந்தமாக உள்ள யந்திரங்களிலோ அல்லது விக்கிரகங்களிலோ ஆவாஹணம் செய்துவைத்திருப்பார்கள். அல்லது மானச மந்திரங்களாக மனதுக்குள் வைத்திருப்பார்கள்.
    சில பொருள்கள் இருக்கின்றன. அவை எந்தவகையான மந்திரங்களையும் குலைத்துவிடும் ஆற்றல் படைத்தவையாக இருக்கும். அவற்றை வைத்திருந்தாலோ, அல்லது நமக்கே தெரியாமல் யாராவது அவற்றைக் கொண்டுவந்து மறைவாக வைத்தாலோ, ஏற்கனவே செய்துவைத்திருக்கிற ஆவாஹணம், ஏற்றி வைத்த உரு எல்லாம் கலைந்துபோய்விடும். சில கோயில்களில் உள்ள மூலமூர்த்திகளுக்கு சான்னித்தியம் குறைந்து போகவோ அல்லது அறவே இல்லாமல் போகவோ செய்வதும் உண்டு. 
    இந்த மாதிரியான பொருள்கள் சகட்டுமேனிக்கு எல்லாவற்றையும் குலைத்து விடக்கூடியவை. 
    அப்படியில்லாமல் பிறன் பிரயோகம் செய்து வைத்த மந்திரங்களை மட்டும் உடைப்பதே பரமந்திரவிபேதனம்.
    நமக்கு உரிய மந்திரங்கள் எவ்வகையிலும் பாதிப்பு அடையமாட்டா.
    Antibiotic மாதிரி. உடலைப் பாதிக்காமல் உடலைப் பாதிக்கும் கிருமிகளை மட்டும் அழிப்பதுபோல.

    $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


    Wednesday, August 15, 2012

    DRINK CHINESE TEA




    தேச் சீனா குடிக்கும் அனுபவம்

    சீனத்துத் தேயிலை என்பது ஒரு ரகமான டீ தூள். நாம் சாதாரணமாகக் குடிக்கும் டீத்தூளைப் போல இருக்காது. ஒரு செண்டிமீட்டர் - 2 செண்டிமீட்டர் அளவில் சிறு சிறு மெல்லிய குச்சிகள் போல் இருக்கும்.
    இதைத் தேச்சீனா என்பார்கள்.
    அதிலேயே ஊலாங் தே என்னும் ஒரு வகை டீ இருக்கிறது. 
    அது கிடைப்பது அரிது. 
    ரொம்பவும் விலை. ஒரு டப்பியின் விலை நூற்றிருபது ரீங்கிட் வரை இருக்கும். அறுபது ரீங்கிட்டுக்கும் கிடைக்கும். அது இன்னொரு ரகம். 
    வட்டவடிவமாகச் சப்பட்டையாக 'கேக்' போல தேத்தூளை அடித்துக்காய வைத்திருப்பார்கள். தேவைக்கேற்ப உடைத்து எடுத்துத் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
    விலை ரொம்ப ரொம்ப அதிகம். மிக மலிவான கேக் ஒன்று ஐம்பது ரீங்கிட். நல்ல தரமானது ஐந்நூறு ரீங்கிட்.
    இந்த மாதிரியான உயர் ரக டீயைத் தயாரிப்பதற்காகவே தனிப்பட்ட டீப்பாட், சிறிய கப்புகள் எல்லாம் வைத்திருக்கிறார்கள். மெல்லிய சுட்ட களிமண்ணால் ஆனவை. 
    டீப் பாட்டைக் கொதிக்கும் தண்ணீரில் ஊறவைத்துத் தண்ணீரை ஊற்றிவிட்டு, மீண்டும் வெந்நீரை ஊற்றி, அதன்மேல் பக்குவமாக டீத்தூளைப் போடவேண்டும். இரண்டு Dried Salted Plums போடவேண்டும். இதை அஸாம்கோ என்பார்கள். 
    டீப் பாட்டை மூடிவிடவேண்டும்.

    டீப் பாட்டை வைத்துவிட்டு அமைதியாகத் தியானம் செய்ய வேண்டும்.  அமைதி, Tranquility, Positivism, சாந்தி, கருணை ஆகிய சாயல்களை மனதில் தோற்றுவித்துக் கொள்ள வேண்டும். மனம் டீப் பாட்டுக்குள் இருக்கும் டீயில் இருக்கவேண்டும். கனிவான பார்வையை டீப்பாட்டின்மேல் செலுத்தவேண்டும்.

    அதன் பின்னர் டீக் கப்பை மீண்டும் வெந்நீரில் ஊறவைத்து விட்டு, அதில் குறைந்த அளவு டீயை ஊற்றவேண்டும். 
    டீக் கப்பை மெதுவாக மூக்கின் கீழ்ப் பிடித்து, டீயிலிருந்து வரும் மெல்லிய நீராவியை மிக மெள்ள சுவாசிக்கவேண்டும். 
    அந்த Aroma உள்ளே சென்ற பிறகு, டீயை மெதுவாக சப்பி வாய்க்குள் 
    சுழற்றிவிட்டு, மூச்சை லேசாக இழுத்து, அந்த அரோமாவை மீண்டும் அனுபவித்து, மெதுவாக மிடறுக்குள் செலுத்தவேண்டும். 

    "சரியாப்போச்சு. ஒரு சிங்கில் டீய அடிக்கறதுக்கு இவ்ளோ தோணாதிக்கமா? வேற வேலச் செரவ இல்ல?" 

    $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

    Monday, April 2, 2012

    SEVVAAY DHOSHAM-#1

    SEVVAAY DHOSHAM
    There was a message in the FaceBook about astrological dhosham.
    I took an old posting which I wrote in Agathiyar and sent to her.
    I thought it might be pertinent to float it around so that many more people might read.


    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    Date: Sat, 06 Feb 1999 08:56:21 +0800
    To: agathiyar@egroups.com
    From: jayabarathi <jaybee@tm.net.my>
    Subject: [agathiyar] Re: Solar/Lunar calendars - few questions#2


    At 08:39 PM 2/4/99 -0500, The Querent wrote:


    >I read your 4 part mail today only. Few questions here.
    >Sometime back my father told me that Raghu/Chevvaai dhosham is not as simple as everyone thinks and said there are more calculatiosn involved.
    >So, for many cases it is not a true dosham at all. (I'm not blowing my trumpet here. Whatever I write now are only my father's inspirations, though the mistakes - if any, are wholly mine.)


    JayBee Wrote-


    It is true. Chevvai dhosham is cancelled by several  fatcors. Judging by these, 70% of the so-called Chavvai dhoshams get neutralised. They are not really afflicted.
    Of the remaining 30%, the dhosham is of varying degrees. 
    The same thing can be said of Raahu dhosham.
    But we have to really think...and think hard on the fate of those girls who are barnded as having these dhoshams, but do not really have afflictions. 
    It is actually the fault of the astrologer or pujaari.
    The common people are conditioned into consulting horoscopes on every occasions for everything. 
    These beleives are only getting stronger. Its because of several factors like fear, desire, ambition, superstition, ignorance, compulsion, etc. 
    So it becomes a racket. 
    There is a priest in North Malaysia. (Year 1999) He is called by tiga-tiga-kosong and lima-lima-kosong.  It means three-three-zero, and five-five-zero. They happen to be the rates for the two types of Santi Homas that he does. 
    He also is beleived to be a great astrologer. And so, if he says there is dhosha , then dhosha it has be.
    He does at least twenty such homas per month. That will be at least Malaysia Ringgit nine thousand. He also does other things as well. Pujas, archanas, marriages, naamakaranas, 
    ear-boring ,etc.
    There is another priest. He will create new dhoshas. Last year, (1998) he declared that all female babies born in the month of Aadi, have a special type of dhosha. He charged Ringgit four hundred and twenty. 
    So we call him "SivaSri Four-Twenty". (All the priests in Malaysia put the title 'Siva Sri' as a prefix).
    Four-twenty....very appropriate. Reminds me of  Indian Penal Code - Section 420 - Fraudulence.
    >>>>>>>>>>>>>>>>>>>


    There is a follow-up on this posting. Will write it in the next madal.


    Regards


    JayBee

    $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$