- மலேசிய இந்துத் தமிழர்களின் சீரழிவு -#1
மலேசியாவில் பூத வழிபாடு, பேய் வழிபாடு, முனி வழிபாடு முதலியவை மிக அதிகமாக ஆகிக்கொண்டிருக்கின்றன. Black Magic, பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றின்மீதும் அதீத நம்பிக்கை. ஆகவே இங்கு சாமியாடிகள், போமோக்கள் எனப்படும் மாந்திரீகர்கள், மந்திரவாதிகள் மிக அதிகமாக உள்ளனர்.
இந்த மாதிரி சூழ்நிலைகளின் நேரடியான விளைவுகளும் ஏராளமாக இருக்கின்றன.
தாயத்துக்கள், மந்திரித்த கயிறுகள், ரட்சைகள், தகடுகள் போன்றவை ஏராளமாக விற்கப்படுகின்றன.
இன்னொன்றும் உண்டு.
அடிக்கடி செய்யப்படும் சத்துரு சங்கார ஹோமங்கள்.
ருத்ர பிரத்தியங்கிரா ஹோமம்.
நல்லவேளை.
இன்னும் மலேசியாவில் வேறு யார் ஒருவருக்கும் வாராஹிதேவி கைவசமாகவில்லை.
தஞ்சாவூருக்கு ஏராளமானோர் போகிறார்கள். அங்கு பெரிய கோயிலில் உள்ள வாராகியம்மனை வழிபட்டுவிட்டு வருகிறார்கள்.
ஆனால்......
இங்குள்ள எந்த பூசாரியுமோ சிவாச்சார்யாரோ தாம் வாராஹியை வசப்படுத்திவைத்திருப்பதாகவோ உபாசனை செய்வதாகவோ சொல்லிக் கொள்ளக் காணோம்.
பல ரகசியங்கள் அவர்களுக்கெல்லாம் தெரிவதில்லை.
சூரிய புராணத்தில் பார்த்துகொள்ளுங்கள். அப்பட்டமாகக் குறிப்பிட்டிருக்கிறது.
இந்துக்களிடம் மட்டும் இந்த மாதிரிப்பட்ட நம்பிக்கைகள் என்று எண்ணிவிடாதீர்கள்.
மலாய்க்காரர்களிடம் இந்த நம்பிக்கைகள் மிக அதிகம்.
இப்போதெல்லாம் மலேசியாவில் எடுக்கப்படும் மலாய்ப்படங்களில் நான்கில் ஒன்று பேய்க் கதைப் படங்கள்.
நன்றாக ஓடுகின்றன.
எப்போதுமே பேயாக நடிப்பவள் மிக அழகிய பெண்ணாக இருப்பாள். மோகினியாக வந்துதான் மயக்கவேண்டும் என்பதில்லை.
இதைப் பார்த்துவிட்டு தமிழாள் ஒருவர் சில பேய்ப்படங்களை எடுத்தார். அவருடைய பெயர் P. ஸோயன்ஸோ. தொடர்ச்சியாகப் பேய்ப் படங்களையே எடுத்ததால் அவருக்குப் பேய் ஸோயன்ஸோ
என்றாகிவிட்டது.
இந்த நாட்டு சமய இயக்கங்களின் தலைவர்களுக்கு இந்து சமயத்தைப்பற்றிய ஞானம் அறவே போதாது. ஏதோ பதவிகள்; அல்லொக்கேஷன்: வெளிநாட்டுப் பயணம்; மாலை மரியாதை.....
இதற்காகத்தான் அவர்கள் இருக்கிறார்கள்.
ஆகையால்தான் இந்து சமயம் பற்றிய சரியான தகவல்கள், ஞானம், அறிதல், புரிதல், தெரிதல் முதலியவை அறவே கிடையாது. மக்களிடையே அவை அறவே இல்லாமற் போய்க்கொண்டிருக்கின்றன.
பூசாரிகள், மந்திரவாதிகள், சாமியாடிகள், ·பிராடு சித்தர்கள் முதலியவர்கள் சொல்வதைக் கேட்டு, அறிவு மழுங்கி அறிவு மயங்கி இருக்கிறார்கள்.
Hopeless Case!!!!!!
^^^^^^^^^^^^^^^^^^^^
there is a hope in hopeless
ReplyDelete