வரலாற்றில் பணவீக்கம் + லூட்டி
தமிழ் அரசர்கள் மற்ற நாடுகளின் மீது படையெடுத்து வென்று திரும்பும் போது அந்த நாடுகளிலிருந்து பெரும் பொருளைக் கைப்பற்றிக் கொண்டு வருவார்கள். கப்பமாகவும் ஆண்டு தோறும் வசூலிப்பார்கள்.
இதனால் வென்ற நாட்டிலும் வெல்லப்பட்ட நாட்டிலும் இருவேறு விதமான பொருளாதார நிலைக்குலைவுகள் ஏற்படும்.
ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன் பாண்டிய நாட்டில் ஒரு பொற்காசுக்கு ஆயிரம் வாழைப்பழங்கள் அல்லது பதினோராயிரத்து இருநூறு வெற்றிலை அல்லது பத்தாயிரத்து நூறு கொட்டைப்பாக்கு வாங்க முடிந்தது.
அக்காலத்தில் பாண்டிய நாட்டில் நிலவிய மார்க்கெட் நிலவரம் அப்படி!
வெற்றிகரமான படையெடுப்பின் முடிவில் கொண்டுவந்த நிதிக் குவியலில் (War Booty என்று கூறுவார்கள்) பெருமளவு பொன் இருக்கும். நாட்டில் திடீரென்று ஏற்படும் இந்தப் பெரிய அளவு பொன்னின் புழக்கம் பயங்கரமான பணவீக்கத்தை ஏற்படுத்திப் பொருளாதாரத் தடுமாற்றத்தை விளைவிக்கும்.
'காசு ஒன்றுக்கு ஆயிரம்' என்ற விலைக்கு விற்கப்பட்ட வாழைப்பழம் ஒன்றை காசுகள் ஆயிரம் கொடுத்து வாங்க நோ¢டும்.
பழைய தமிழகத்தில் அடிக்கடி இப்படிப்பட்ட இன்பி·லேஷன் (Inflation) ஏற்பட்டுக் கொண்டே இருந்தது.
எப்படி சமாளித்தார்கள்?
"இப்படியெல்லாம் நடந்ததா?" என்று சிலர் கேட்கக்கூடும். "தமிழ் மன்னர்கள் நீதி தவறாதவர்களாயிற்றே! தர்மயுத்தம் புரிபவர்களாயிற்றே!" என்றெல்லாம் சொல்வார்கள். ஏனெனில் அவர்கள் அவ்வாறு நம்புவதற்கு, எண்ணுவதற்கு - பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்த Mind-set செயற்கையாக ஏற்படுத்தப்பட்டது. வரலாற்று நாவலாசிரியர்கள் இதற்குப் பெரும் காரணமாக இருக்கிறார்கள். ஆரம்ப காலத்து திராவிட முன்னேற்றக் கழகம் இந்த மாதிரியான கருத்துக்களைப் பரப்பியது.
நாவலிஸ்டுகள் தமிழ் மன்னர்களுக்கு எதிரியாக உள்ள கலிங்கர், சாளுக்கியர் போன்றோரை மகாக் கொடுமையாளர்களாகச் சித்தரிப்பார்கள்.
தமிழ் மன்னர்களிடையேகூட ஹீரோவாக இருக்கும் தமிழ் மன்னன் நல்லவனாகவும் வல்லவனாகவும் அவனுக்கு எதிரியான தமிழ் மன்னன் கோழையாகவும் கெட்டவனாகவும் சித்தரிக்கப்படுவார்கள்.
இதை வைத்து ஓர் ஆராய்ச்சியே செய்யலாம்.
கல்கி, சாண்டில்யன், அகிலன் ஆகியோரின் நாவல்களை ஆராயலாம்.
இதெல்லாம் ஒரு Paradigm Situation.
தமிழ் மன்னர்கள் நார்மலான மன்னர்கள். மற்ற மன்னர்களிடம் இருந்த கொடுமை, கொடூரம், வக்கிரம், பொறாமை, வஞ்சனை, நன்றி மறப்பது போன்ற - மன்னர்களுக்குரிய ராஜலட்சண ராஜரீக குணங்கள் மற்ற இனத்து மன்னர்களைப் போலவே இருந்தது.
இதில் வெட்கப்படவோ, வேதனைப் படவோ என்ன இருக்கிறது.
இப்போது மாதிரியேதான்.......
Kill... Or Get Killed.
அவர்கள் போர் தொடுத்துச்செல்லும் நாட்டைக் கொள்ளையிட்டுச் சூறையாடி நெருப்பும் இட்ட விபரத்தை அவர்கள் விலாவாரியாகக் கல்வெட்டில் வெட்டியும் வைத்திருக்கிறார்கள்; அழகாகப் பாடியும் வைத்திருக்கிறார்கள்.
விஸ்வாக்காம்ப்லெக்ஸில் 'வேளம் ஏற்றுதல்', 'தமிழக வரலாற்றை மாற்றிய போர்' ஆகிய கட்டுரைகளில் விபரங்களைத் தெளிவாகக் காணலாம்.
தண்டெடுத்துச் சென்ற நாட்டைச் சூறையாடுதல் என்பது பழங்கால போர் மரபுகளில் ஒன்று.
Loot And Arson என்றொரு சொற்றொடர் உண்டு. இந்த ஆணையை அரசனோ படைத்தளபதியோ இட்டுவிட்டால் போர் வீரர்கள் இஷ்டப்படி செய்துகொள்ளலாம். தோற்ற மக்களைக் கொல்லலாம்; அடிமைகளாகப் பிடித்து வைத்துக்கொள்ளலாம்; கொள்ளையடிக்கலாம்; ஊரையே
கொளுத்திவிடலாம்.
தமிழில் 'லூட்டியடித்தல்' என்றொரு சொல் இருக்கிறது. 'Loot அடித்தல்' என்பதைத்தான் இப்படி நம்ம ஆட்கள் சொல்கிறார்கள்.
லூட் அடித்த பொருள்களை அரசனிடமோ அல்லது தண்டெடுத்துச் சென்ற தண்டநாயகனிடமோ ஒப்படைக்க வேண்டும்.
அரசனுக்குரிய பங்கு, தளபதிகளுக்குரிய பங்கு என்று எடுத்துக்கொண்டு மீதியை லூட் அடித்த போராளிக்குக் கொடுப்பார்கள்.
இது உலக வழக்கு.
War Booty என்பது தோற்ற நாட்டிடமிருந்து கைப்பற்றிய பொருள்.
இது யுத்த தர்மப்படி நியாயமான விஷயம்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
No comments:
Post a Comment