13
Octophobia என்பது எட்டைக் குறித்த பயம்.
ஐரோப்பியர்கள் கிரிஸ்துவர்களாக மாறுவதற்கு முன்னர் ஷாமானிஸம், பேகனிஸம், கெல்த்திய மதம், நார்ஸ் மதம் போன்ற மதங்கள் இருந்தன.
பதின்மூன்று எண் பழைய கெல்த்திய, பண்டைய ஐரோப்பிய சமயத்தில் முக்கியமானதாக இருந்தது.
பதின்மூன்றாம் நாள் முக்கியமான நாளாகவும் புனிதமான நாளாகவும் இருந்தது.
கெல்த்திய சமயத்திலிருந்து கிரிஸ்த்துவ மதத்துக்கு ஐரோப்பியர்கள்
மாறியபோது கெல்த்திய மத சம்பிரதாயங்களுக்கு பயங்கரமான
தோற்றத்தையும் ஏற்படுத்தி, அவற்றைப் பற்றிய பயங்கரமான கருத்துக்களைப் பரப்பிவிட்டார்கள். அந்த மதத்தின் கூறுகளை Wiccaan, Witchcraft, Sorcery போன்றவற்றைச் சேர்ந்தவையாகக் கருதுமாறு ஏற்படுத்திவிட்டார்கள். இவையெல்லாம் மாந்திரீக வாதத்தைச் சேர்ந்தவை.
கெல்த்திய மதத்தில் புனிதமாக இருந்த பல விஷயங்களை சாத்தானியக் கலாச்சாரமாகக் கருதச் செய்துவிட்டார்கள்.
பதின்மூன்றுக்கு ஏதோ விசேஷமான கூறுகள் இருக்கின்றன என்பது
வாஸ்தவம்தான்.
பதின்மூன்றாம் தேதி வெள்ளிக்கிழமையாக இருந்தால் அதை மாந்திரீகவாதினிகளுடைய(Witches) முக்கிய நாளாகக் கருதுவார்கள். அது ஏதோ சூனியம் நிறைந்த நாள் என்று தற்கால ஐரோப்பியர்கள் கருதுவார்கள். அதனை Witches Sabbath என்றும் அழைப்பார்கள்.
இந்தச் சேர்க்கையானது Witchcraft, Satanic Worship ஆகியவற்றிற்கு முக்கியமானது. நம்முடைய சம்பிரதாயத்தில் வெள்ளிக்கிழமையும்
அமாவாசையும் சேர்வது குறித்து பல விசேஷங்கள் உண்டு.
அகத்தியர் யாஹ¥ மடற்குழுவில் Tridecaphobia, Friday 13, வெள்ளிக்
கிழமை அமாவாசை முதலியவற்றைப் பற்றிய சில மடல்கள் இருக்கின்றன.
அமெரிக்கர்கள் அப்போலோ விண்கலங்களை வெற்றிகரமாக
செலுத்திக்கொண்டிருந்தபோது அந்த வரிசையில் அப்போலோ 13
இருப்பதைக் குறித்து அந்த எண்ணுக்காக அஞ்சினார்.
அதுவும் கோளாறாக முடிந்தது. இன்னும் நிறைய 13ஐப் பற்றி சொல்லலாம்.
ஏசு பெருமானார் தம்முடைய பன்னிரண்டு சீடர்களுடன் இருந்து
கடைசி பாஸோவர் விருந்தை உண்டார். அத்துடன் சீடன் யூதாஸை அவர் வெளியில் அனுப்பினார். சற்று நேரத்தில் விருந்து முடிந்த பின்னர், யூதாஸ் சில போர் வீரர்களுடன் வந்தான். அவன் ஏசு பெருமானாரின் கன்னத்தில் முத்தமிட்டான். அதையே அடையாளாகவும் சைகையாகவும் கருதிய போர்வீரர்கள் ஏசு பெருமானாரைக் கைது செய்தனர். பின்னர் அவர் சித்திரவதைகளுக்குப் பின்னர் சிலுவையில் அறையப்பட்டார். யூதாஸ¤ம் தூக்குப் போட்டுக் கொண்டான்.
பதிமூன்றைப் பற்றி பயப்படுவதற்கு இந்தக் கதையையும் காரணமாகச் சொல்வார்கள்.
ஆனால் நம்முடைய ஆகம புராணங்களில் பதின்மூன்றைப் பற்றி
ஏதும் பயம் இருப்பதாகத் தெரியவில்லை.
சீனர்கள் பதிமூன்றுக்குப் பயப்படுவார்கள். அவர்கள் பயப்படுவதன்
காரணம் வேறு.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
சுவாரஸ்யமான செய்திகள் டாக்டர், நன்றி
ReplyDelete